மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      இந்தியா
corona Maharashtra 2020 03 31

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிற நபர்களுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்ந நிலையில், மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி புனே, புல்தானாவில் தலா இருவரும், மும்பையில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து