விசாகப்பட்டினத்தில் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலி

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Crane Visakhapatnam 2020 08 01

Source: provided

விசாகபட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு சரக்குகளை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.

மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து