குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      தமிழகம்

சென்னை : குமரி மாவட்ட பொருளாளர் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,  கன்னியாகுமரி மேற்கு  மாவட்ட பொருளாளர் திலக்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும் கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த திலக்குமார், மாவட்ட செயலாளர், திருவெட்டாறு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

அன்பு சகோதரர் திலக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து