முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவே இல்லையாம். 

தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமோவ் ஹாஜி. இவருக்கு தண்ணீர் என்றாலே பயம். இதனால் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை இவர் நனைத்ததில்லை. குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என்று அமோவ் ஹாஜி நம்புகிறார். இதனால் தண்ணீர் பக்கம் எட்டி பார்க்காததால். உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே அமோவ் ஹாஜி காட்சியளிக்கிறார். தன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால், அமோவ் ஹாஜி தனியாகவே வசிக்கிறார். 

சாம்பல் மற்றும் அழுக்குகளால் நிறைந்த அவரை பார்த்தால் ஒரு சிற்பம் போல் தோற்றமளிக்கிறார். 

அமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

முள்ளம்பன்றி கறி அமோவ் ஹாஜிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். 

தற்போது 87 வயதாகும் அமோவ் ஹாஜிக்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி, தன் உடல் எப்படியிருக்கிறது என்று கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. இவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறார். 

பல ஆண்டுகளாக குளிக்காத ஒரே மனிதர் ஹாஜி மட்டுமல்ல. 1974 இல் திருமணமானவுடன் வாரணாசியைச் சேர்ந்த குரு கைலாஷ் சிங் குளிக்க மறுத்துவிட்டார். கைலாஷ் சிங்கிற்கு தொடர்ந்து ஏழு மகள்கள் பிறந்தனர். ஆண் குழந்தைக்கு அவர் ஆசைபட்டார். அவர் குளிப்பதை நிறுத்தினால் அவருக்கு ஒரு மகன் இருப்பார் என்று சாமியார் ஒருவர் கூறியதையடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்தாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து