புதுடெல்லி : நாட்டின் 72-வது குடியரசு நாள் விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்கிறது. நாட்டின் ராணுவ வலிமை, படைப்பலம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் பல்வேறு துறைகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவம் பங்கேற்றது.
1971-ம் ஆண்டு போரின் போது வங்கதேசத்துக்கு இந்திய ராணுவம் உதவியதன் பேரில், விடுதலை பெற்று, இந்தியா - வங்கதேசம் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் நேற்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் வங்கதேச ராணுவம் பங்கேற்றது.