நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் எம்.பி. சஸ்பெண்ட் வெங்கையா நாயுடு அறிவிப்பு

Chandanu-Sen 2021 07 23

Source: provided

புது டெல்லி: மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து எறிந்ததை தொடர்ந்து நேற்று மாநிலங்களவை கூடியதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்  மாநிலங்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று முன்தினம் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் தொடர்பாக ஓர் அறிக்கையை வாசித்தார்.   அப்போது குறுக்கிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சர் கையிலிருந்த நகலைப் பறித்து அதைக் கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று மாநிலங்களவை கூடியதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்  மாநிலங்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மேலும், இது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் எனவும் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து