முக்கிய செய்திகள்

ஆறு கெட்டப்புகளில் அரவிந்தசாமி

வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021      சினிமா
Aravindasamy 2021 08 13

Source: provided

அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.  3 நாளில் 2மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது இந்த வணங்காமுடி. டீசர். ‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2  பட இயக்குனர் செல்வா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது... ‘‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்..

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து