முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச வன்முறை: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

Lakhimpur 2021 10 04

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநில லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கிகல்வீச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4 போ் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். 

இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் மோதலில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் காய்சியப் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து