முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

Putin--2021-10-21

ரஷ்யாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனிடையே  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 27 லட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.  இந்தநிலையில்,   ரஷ்யாவில் மீண்டும் கொரோனா  பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும், அங்குள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.  ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதனிடையே அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு அக்.,30 முதல் நவம்பர் 7-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் கடுமையான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து