முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவர மீனவர்கள் வரும் 29-ம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல தடை

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்வதால் நவ. 29-ம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் நேற்று முதல் 29-ம் தேதி வரையில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!