முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
BUS 2024-08-30

Source: provided

சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை. பேருந்துகள், கடைகள் வழங்கம்போல் இயங்கின. நாடு தழுவிய போராட்டத்தால் கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய அரசை எதிர்த்து, 13 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள், நேற்று (ஜூலை 9) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், குறைந்த ஊழியர்களுடன் செயல்படும். தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், வருவாய் துறை அலுவலர் சங்கங்கள் போன்றவை, வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், இன்று வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என, மாநில அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது ள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கேரளா, மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்; மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பது உட்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - தொ.மு.ச., - ஐ.என்.டி.யு.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

இப்போராட்டத்திற்கு தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ, வருவாய் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், நேற்று வங்கிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன.

வேலை நிறுத்தத்தால், எந்தவித பாதிப்புமின்றி, தமிழகம் முழுதும் முழு அளவில் பஸ்கள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. பந்த் காரணமாக, தமிழகத்தில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. கடைகள், வணிக வளாகங்கள் எப்போதும் போல் திறந்திருந்தன. ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்பட்டன. ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மாநில அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. முக்கிய நகரங்களில் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.

பந்த் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். கோல்கட்டாவில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. துர்காபூர், ஜாதவ்புர், முர்ஷிதாபாத், பாரக்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டனர். எனினும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி இருந்ததால், அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. இடதுசாரி தொழிற்சங்கத்தினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கேரளாவில் முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவு எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில், பந்த் முற்றிலும் பிசுபிசுத்தது. பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. இடதுசாரி தொழிற்சங்கத்தினர் முக்கிய நகரங்களில் ஊர்வலம் நடத்தினர். பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில் பந்த் காரணமாக பாதிப்பு எதுவும் இல்லை. அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மட்டுமே வெவ்வேறு இடங்களில் நடந்தன.

முன்னதாக, அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போராட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். எனவே, தமிழக அரசு ஊழியர்கள், நடத்தை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து