முக்கிய செய்திகள்

கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 129 ரன்கள் சேர்ப்பு : இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
New Zealand 2021 11 26

Source: provided

கான்பூர் : கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 129 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

258 ரன்கள் சேர்ப்பு...

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

முதல் சதம் விளாசல்...

இந்நிலையில் இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75  ரன்களும், ஜடேஜா 50 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார். 

345 ரன்களுக்கு...

சீரான இடைவேளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. சகா 1, அக்சர் 3, அஸ்வின் 38, இஷாந்த் 0 என வெளியேறினர். உமேஷ் யாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக  இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களும் , சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா  50 ரன்களும், அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர்.

129 ரன்கள்...

நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 5 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆட களமிறங்கியது. முதல் இன்னிங்சில்  நியூசிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களும்,  டாம்  லாதம்  50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து