முக்கிய செய்திகள்

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: ஹர்பஜனை முந்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      விளையாட்டு
Aswin 2021 11 29

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார்.

418-வது டெஸ்ட்... 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட். இதன்மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். 80 டெஸ்டுகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். அடுத்ததாக கபில் தேவின் 434 விக்கெட்டுகளைத் தாண்டி விட்டால் 2-வது இடம் கிடைத்து விடும். இச்சாதனையை விரைவில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த இந்தியர்கள்

1) 619 - அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்).

2) 434 - கபில் தேவ் (131 டெஸ்டுகள்).

3) 418*- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்).

4) 417 - ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து