முக்கிய செய்திகள்

ஒமிக்ரான் பரவல்: ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை அனுப்பும் சீனா

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Xi-Jinping 2021 11 30

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்புகிறது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.  இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

இந்நிலையில் சீன -ஆப்பிரிக்கா கூட்டுறவின் 8-வது மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா வைரஸையும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸையும் எதிர்த்துப் போராடும் வகையி்ல் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.  ஏற்கெனவே 60 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன, அதோடு சேர்த்து கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 10 சுகாதாரத் தி்ட்டங்களைச் செயல்படுத்தவும், 1500 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து