முக்கிய செய்திகள்

உ.பி.யில் பா.ஜ.க ஆட்சியை 'சிகப்பு தொப்பி' அகற்றும்: பிரதமர் மோடிக்கு அகிலேஷ் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      இந்தியா
Akhilesh-Yadav- 2021 12 07

சிகப்பு தொப்பி ஆட்சிக்கு வர விரும்புவது கொள்ளை அடிக்கவும், நிலத்தை அபகரிக்கவும், பயங்கரவாதிகளை விடுவிக்கவும் என பிரதமர் மோடி கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உ.பி.யில் பா.ஜ.க ஆட்சியை 'சிகப்பு தொப்பி' அகற்றும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் சென்றிருந்தார். உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, சமாஜ்வாடி கட்சியை நேரடியாக தாக்கினார். சிகப்பு தொப்பிக்காரர்கள் ஆட்சிக்கு வர விரும்புவது, பயங்கரவாதிகளை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், சிகப்பு தொப்பிகள் என்பது உத்தர பிரதேசத்திற்கு சிகப்பு எச்சரிக்கை, அது எச்சரிக்கை மணி என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ், ‘‘பி.ஜே.பி.க்கு பணவீக்கம், வேலையிண்மை, விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் மோசமான நிலை, ஹத்ராஸ் மற்றும் லக்கிம்பூர் கெரி சம்பவம், கல்வி திட்டத்தை அழித்தல், தொழில் மற்றும் சுகாதாரம் ஆகியவை சிகப்பு எச்சரிக்கை. இந்த 'சிகப்பு' தொப்பி உ.பி.யில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அப்புறப்படுத்தும். 'சிகப்பு' புரட்சி செய்து 2022-ல் மாற்றத்தை கொண்டு வரும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து