முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: வெளிநாடு மட்டுமின்றி உள்நாட்டு பயணிகளும் தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம்

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்று,  இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சா்வதேச விமான நிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஆனால், இப்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம் என்றும், கேரள மாநில பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும், கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை இந்திய விமானநிலைய ஆணையம் விதித்துள்ளது. 

இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, 

கேரளா மாநிலத்தில் இருந்து, தமிழகம் வரும் பயணிகள் அனைவரும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்.  பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணியர் அனைவருக்கும் இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணிகள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

சர்வதேச பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். இதே போல, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு முறை கட்டாயம் என்று கூறியுள்ளது. முன்னதாக சர்வதேச விமான பயணிக்கு மட்டுமே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதன்படி உள்நாட்டு பயணிகள் அனைவரும் தர்மல் ஸ்கேனர் பரிசோதனை முறை, இ-பதிவு முறை கட்டாயம் என்றும் கேரள பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிகளும், கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து