முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பரபரப்பு சம்பவம்: சபரிமலைக்கு சென்ற பெண் மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு தாக்குதல்

வியாழக்கிழமை, 6 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலைக்கு சென்ற பெண் மீது கோழிக்கோடு கடற்கரை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வெளியானதும் 2019-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெ ண்ணிய ஆர்வலர்கள் பிந்து அம்மணி மற்றும் கனகதுர்க்கா ஆகியோர் சபரிமலை சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் பிந்து அம்மணி, கனகதுர்க்கா இருவரையும் சிலர் தாக்கும் சம்பவங்களும் நடந்தன.

இச்சம்பவங்கள் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் பிந்து அம்மணி கோழிக்கோடு கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பிந்து அம்மணியை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதை எதிர்ப்பார்க்காத பிந்து அம்மணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும், தாக்குதல் நடத்தியவர் ஓடிவிட்டார்.

இதுபற்றி பிந்து அம்மணி போலீசில் புகார் செய்தார் மேலும் அவர் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக பிந்து அம்மணி கூறும்போது, தன்னை சிலர் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், இது குறித்து பல முறை புகார் கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து