முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வணிக வரி வசூல் ரூ. 2.36 கோடி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வணி வரி ரூ. 2.36 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திடுவதில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது.  இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன்படி 03.01.2022 முதல் 09.01.2022 வரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 11474 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 13351  மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 314 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி/தண்டத்தொகையாக ரூ. 2.36 கோடி  வசூல் செய்யப்பட்டுள்ளது.  அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளுமின்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து