முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

எந்த சோதனையிலும் கண்டறிய முடியாதாம் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸ்' என்று   புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையான வைரஸ் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.

உலக அளவில் தற்போது ஒமைக்ரான் எல்லா நாடுகளிலுமே வேகம் எடுத்துள்ளது. நேற்றுவரை டெல்டா வைரஸ்தான் உலகை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது டெல்டாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒமைக்ரான் ஆக்கிரமிக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் இதுவரை பல பெயர்களில் மாற்றம் அடைந்துவிட்டது. அதில் டெல்டா வகை வைரஸ் தான் உலக மக்களை படாதபாடு படுத்திவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் புதிய வடிவமாக ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் பரவிய ஒமைக்ரான் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒமைக்ரானை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது இதுவரை இல்லாத அளவுக்கு பரவுவதை உறுதி செய்தனர். அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல், தொண்டை அரிப்பு மற்றும் உடல்வலி போன்றவை ஒமைக்ரானின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. ஒமைக்ரான் கடுமையான விதத்தில் பரவினாலும் அது மக்களை மருத்துவமனைகளுக்கு தள்ளும் வகையில் பின்விளைவுகளை ஏற்படுத்த வில்லை. இதனால் ஒமைக்ரான் வந்தாலும் வீட்டில் சில நாட்கள் தனிமைபடுத்திக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

உலக அளவில் தற்போது ஒமைக்ரான் எல்லா நாடுகளிலுமே வேகம் எடுத்துள்ளது. நேற்றுவரை டெல்டா வைரஸ்தான் உலகை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது டெல்டாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒமைக்ரான் ஆக்கிரமிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா வகை வைரஸ்கள் காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உலகத்தில் இருந்தே கொரோனா அலைகளுக்கு ஒமைக்ரான் விடை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று மருத்துவ நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஒமைக்ரான், டெல்டா வைரஸ்கள் கலப்பு காரணமாக சில புதிய வகை வைரஸ்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக ஒமைக்ரானின் வடிவமைப்பில் இருந்து பிஏ1, பிஏ2, பிஏ3 என்று 3 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் 2 வகைகளான பிஏ1, பிஏ2 இரண்டும் உலகை தற்போது கலங்கடித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் பிஏ2 வகை ஒமைக்ரான் அதிகளவில் பரவி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒமைக்ரானுக்கு தனிப்பட்ட வகையில் எந்த வகை குணமும் இல்லாததால் அவற்றை வரையறுப்பது விஞ்ஞானிகளுக்கு கடினமாக உள்ளது.

இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு வகை யான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒமைக்ரானின் பிஏ2 உருமாற்றம் ‘கள்ளன்’ போல மாறிவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். திருடன் எப்படி பொருட்களை களவாடிவிட்டு ஒளிந்து கொள்வானோ அப்படி இந்த வைரஸ் மனிதர்கள் உடலில் தாக்கி விட்டு ரகசியமாக உடலுக்குள் மறைந்துகொள்வதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனால் பிஏ2 வகை வைரசுக்கு நிபுணர்கள், ‘ரகசிய கள்ளன் ஒமைக்ரான்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த வகை வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக மிகவேகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அலையாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 40 நாடுகளில் கடும் தாக்கத்தை பிஏ2 ஒமைக்ரான் ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 40 நாடுகளிலும் நடந்த ஆய்வில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது எந்த சோதனையிலும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸ் சிக்குவதில்லை. கள்ளன் போல மறைந்து கொள்கிறது ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனையிலும் அது சிக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த வகை வைரசிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து