முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்காக ரூ. 1,000 வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்: தஞ்சையில் அண்ணாமலை பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

தேர்தல் வருவதால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று நடைபெற்ற பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பா.ஜ.க.வுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதே நேரத்தில் தி.மு.க. அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ. 1,000 வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர். இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாகச் செல்கின்றனர். இதற்கான அரசாணையோ, பட்ஜெட்டோ போடாமல் பணத்தை உடனடியாகக் கொடுக்கப் போகிறோம் எனக் கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை. இது பற்றி இதுவரையிலும் பேசாத தி.மு.க., இப்போது பேசத் தொடங்கியிருக்கிறது என்றால், மக்களின் கோபம் அவர்கள் மீது திரும்பி விட்டது என்பது தெரிய வருகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காக இன்னொரு பொய்யைப் பேசுகின்றனர். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்.

 

மத்திய அரசின் சாதனைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். திட்டப் பயனாளிகள் எல்லா வீடுகளிலும் இருப்பதால், பா.ஜ.க.வுக்கு எழுச்சி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர் மீது எங்கேயும் துப்பாக்கிச் சூடு இல்லை. இத்தனை காலம் பிரச்சினை இல்லாத நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது எப்படி வருகிறது. எனவே, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது என அவர்கள்தான் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். என்றாலும், அனைத்து மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து