Idhayam Matrimony

2-ம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு சசிகலா பயணம்: அரசியல் ஆதரவாளர்களை சந்திக்க திட்டம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.  பின்னர் மாலையில் சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இளவரசி, அவருடைய மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர். 

முன்னதாக திருச்செந்தூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் சசிகலா தங்கினார். அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு சசிகலா, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.  இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில்  சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து