முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Stalin 2020 07-18

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவிருக்கிறார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  அதன்பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 1) சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு மாநில முதல்வர்களும் டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்கின்றனர்.  டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!