முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ராஜின் “தோட்டா” இசை ஆல்பம் வெளியீடு

திங்கட்கிழமை, 2 மே 2022      சினிமா
Rio-Raj 2022 05 02

Source: provided

Noise and Grains தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” ஆல்பம்  பாடலின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் “தோட்டா”.  இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர். இப்பாடலில்  ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். இப்பாடலின் வெளியீட்டு விழா,  சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள,   பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா,  உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவில் நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது…கண்ணம்மா பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யாவும் நண்பர்கள் அவர் இதில் நடித்தது மகிழச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!