முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான பண்டிட் ஷிவ்குமார் சர்மா மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Modi-1 2022 05 10

Source: provided

மும்பை : பிரபல இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான பண்டிட் ஷிவ்குமார் சர்மா (வயது 84) மும்பையில் மாரடைப்பால் காலமானார். இவர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான பண்டிட் ஷிவ்குமார் சர்மா, அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். இந்த நிலையில் அவர் சிறுநீரகக் கோளாறுகளாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். 

பத்ம விபூஷன் பெற்றவர், ஷிவ்குமார் சர்மா ஜம்முவில் 1938 இல் பிறந்தார் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர் என்று கூறப்படுகிறது. இசைக்கலைஞர்களான ஷிவ்-ஹரியின் ஒரு பாதியாக, அவர் புல்லாங்குழல் ஜாம்பவான் பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியாவுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், பண்டிட் ஷிவ்குமார் சர்மா ஜியின் மறைவால் நமது இசையின் கலாச்சார உலகம் செல்வாக்கு இழந்து விட்டது. உலக அளவில் சாந்தூரை பிரபலப்படுத்தினார். வரும் தலைமுறையினரையும் அவரது இசை கவரும் வகையில் அமைந்தது. அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!