முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபயேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
Gotabhaya-Rajapaksa 2022-05

Source: provided

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. 

இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் காலை கூடியது.  அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கொண்டு வந்த தீர்மானத்தை 68 பேர் ஆதரித்த நிலையில் 119 பேர் எதிராக வாக்களித்தனர்.  இலங்கை அதிகர் கோத்பய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.  அவசர கதியில் அதிபர் கோத்தபயவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாமா என வாக்கெடுப்பில் ஆளும் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்னெடுத்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து