முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் திருப்பதி சுற்றுலா: முன் பதிவு நடைமுறை 15-ம் தேதி முதல் அமல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      ஆன்மிகம்
Tirumala 2022-06-09

ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவிற்காக பயணம் செய்யும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை வரும் 15-ம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கி வருகிறது.  தற்போது சுற்றுலா பயணிகளின் விவரங்களை இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமலை தேவஸ்தானத்தின் பிரதான சர்வரில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.  இந்த நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 7 நாட்களாக மாற்றம் செய்துள்ளது.  

எனவே சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவை பயணம் செய்யும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இந்த நடைமுறை வரும் 15.06.2022 முதல் அமலுக்கு வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,  சுற்றுலா வளாகம், 2, வாலாஜா சாலை, சென்னை -2, போன்: 044 – 25333333, 25333444, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!