முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பானிபட்டில் அடுத்த தலைமுறைக்கான எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022 07 29

Source: provided

பானிபட் : பானிபட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பானிபட் எத்தனால் தொழிற்சாலையால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலையில் தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலை, ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் திறன்பெற்றதாகும்.

நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து