முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு பொது மன்னிப்பு : தென்கொரிய அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      உலகம்
Lee-J-Young 2022-08-12

Source: provided

சியோல் : ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு தென் கொரிய அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரும், பெரும் பணக்காரரான லீ ஜே யங் உலகின் 278-வது பணக்காரர் ஆவார். கடந்த 2021 ஜனவரி மாதம் இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த ஆகஸ்ட் 2021-ல் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தென் கொரிய அதிபர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி லீ ஜே யங்கை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார். 

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், தென் கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் லீ ஜே யங்குக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லீ ஜே யங் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவுவார் என்று தென் கொரிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.  

லீ உடன் சேர்த்து மொத்தம் மூன்று தொழிலதிபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. லாட்டே குழும நிர்வாகி சிங் டாங் பின்னுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து