முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது : கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      உலகம்
Gothapaya 2022-08-12

Source: provided

பாங்காங் : பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தாய்லாந்தில் தங்கி இருக்கும் வரையில் ஓட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அவருக்கு தடை விதித்துள்ளனர்.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் நடத்திய போராட்டதால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே, கடந்த ஜூலை 13-ம் தேதி மாலத்தீவு சென்றார்.

அங்கும் மக்கள் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து தப்பி   சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் தஞ்சம் பெற முயன்ற அவருக்கு உதவ சிங்கப்பூர் அரசு மறுத்து விட்டது. 

முதலில் 15 நாட்களும், பிறகு மேலும் 15 நாட்களும் தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளித்தது. இந்த கெடு கடந்த வியாழன்று முடிவடைந்ததால், சிங்கப்பூரில் இருந்து 3 பேருடன் தாய்லாந்துக்கு சென்றார்.

முதலில் புக்கெட் விமான நிலையத்தில் அவர் தரையிறங்க இருந்தார். ஆனால், அவருடைய விமானம் திருப்பி விடப்பட்டு, பாங்காங்கில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து, பாங்காங்கில் உள்ள நட்சத்திர  ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கியுள்ளார். ஆனால், இங்கும் அவருக்கு சிக்கல் நீடிக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தாய்லாந்தில் தங்கி இருக்கும் வரையில் ஓட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அவருக்கு தடை விதித்துள்ளனர்.

தனது நாட்டில் 90 நாட்கள் மட்டுமே தற்காலிகமாக தங்கியிருக்க, தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்குள் வேறு நாட்டில் தஞ்சம் அடைவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறது. இதனால், கோத்தபய  ராஜபக்சே வேதனையில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து