எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அயர்லாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் (37 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2006ல் அறிமுகமான கெவின், இதுவரை 3 டெஸ்ட், 153 ஒருநாள் மற்றும் 110 டி20 போட்டிகளில் விளையாடி 5850 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அயர்லாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் வரலாற்று வெற்றிகளை பெற கெவின் ஓ பிரையனின் பங்கு மிக முக்கியமாகும். குறிப்பாக கெவின் ஓ பிரையன் 2011 ஐசிசி உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.அவரது சதம் அப்போது உலகக் கோப்பையில் அதிவேக சதம்.
_____________
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணி அறிவிப்பு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியை முகமது நபி தலைமை தாங்குகிறார்.
ஆசிய கோப்பை டி20 கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விபரம்:- முகமது நபி (கே), நஜிபுல்லா ஜத்ரான், அஃப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், பரித் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் உர் ரஹ்மான், நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான் மற்றும் சமியுல்லா ஷின்வாரி. நிஜாத் மசூத், கைஸ் அஹ்மத் மற்றும் ஷரபுதீன் அஷ்ரஃப் ஆகிய மூன்று வீரர்கள், கூடுதல் வீரர்களாக உள்ளனர்.
_____________
ஐ.எல். டி-20 - நைட்ரைடர்ஸ் அணியில் பிரபல வீரர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்: சுநீல் நரைன், ரஸ்ஸல், அகேல் ஹூசைன், ரேமான் ரீஃபர், கென்னர் லூயிஸ் (மே.இ. தீவுகள்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து), லஹிரு குமாரா, சரித் அசலங்கா, சீக்குக் பிரசன்னா (இலங்கை), காலின் இங்க்ரம் (தென்னாப்பிரிக்கா), அலி கான் (அமெரிக்கா), பிராண்டன் குளோவர் (நெதர்லாந்து).
_____________
4-வது டி20 போட்டியில் ஆப்கான் அணி வெற்றி
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இறுதியில்,அயர்லாந்து 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டாக்ரெல் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.


