Idhayam Matrimony

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு: பஞ்சாப் முதல்வர் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Modi-2- 2022-09-25

Source: provided

புது டெல்லி: சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:- 

காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும் குப்பைகளும் பிரச்சனையாக உள்ளன. இந்தச் சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும். சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் வரும் 28-ம் தேதி முக்கியமான நாளாகும். அன்று பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

இது பற்றி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரியானா சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் நான் என இருவரும் சேர்ந்து பரஸ்பரம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். அதில், மொகாலி-சண்டிகர் விமான நிலையத்திற்கு, வருகிற 28-ம் தேதி பகத் சிங் பிறந்த நாள் வருவதற்கு முன்பு, அந்த பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம். பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில், இந்த பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து