முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Palani 2023 01 29

Source: provided

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 2023-ம் ஆண்டு தைப்பூச திருவிழா 29.01.2023-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விழாவின் ஆறாம் நாளான 03-ம் தேதி  திருக்கல்யாண வெள்ளித் தேரும், ஏழாம் நாளான 04-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும், பத்தாம் நாளான  07-ம் தேதி தெப்பத்தேர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.              

தைப்பூசம் தை மாதத்தில் பூச நட்சத்திரமும்,  பௌர்ணமியும் சேர்த்து வரும் நான்னாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும்.  இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தின் சிறப்பு இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பக்தர்கள் பலர் விரதம் இருந்து பல்வேறு வகையான காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம்.

பழனி தலங்கள் பழனி தலத்தின் மேற்கே 2 கல் தொலைவில் சண்முக நதி உள்ளது. இந்நதி புனித தீர்த்த நதியாக வழங்கப்படுகிறது. பாலாறு, வரத்தாறு, பொருந்தாலாறு, சுருளியாறு, கல்லாறு, பச்சையாறு எனப்படும் ஆறு நதிகள் இணைந்து சண்முக நதி என்னும் பெயருடன் விளங்குகிறது. 

திருஆவினன்குடி கோயில் வட கிழக்கில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. பழனி ஊர்க்கோயிலாகிய பெரிய நாயகி அம்மன் கோவில் மேற்குப் பக்கத்தில் இருக்கிறது. பழனிக்கு வடக்காக  3 கல் தொலைவில் பெரியாவுடையார் கோவில் இருக்கிறது. பக்தர்களின் நல்வரவுகளுடன் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கந்த விலாஸ் பழனி 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து