முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Ayodhya 2023-01-17

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்து பேசுகையில், அயோத்தியின் ராம் லல்லா சதன் பகுதியில் வசித்து வரும் மனோஜ் குமார் என்பவருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், ராம் ஜென்மபூமி இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமல் கோயில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறார்கள். நேபாளத்திலிருந்து விஷ்ணு சிலை ராமர் கோயிலுக்கு நேற்று வந்தது. அதனை கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மிகச் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர். இந்த நேரத்தில, இப்படி ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து