முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      சினிமா
Vani-Jayaram-1 2023 02 04

Source: provided

சென்னை :  தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

1971-ம் வருடப் புத்தாண்டில் வெளிவந்த குட்டி (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். 

இந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 19-க்கும் மேற்பட்ட மொழி பாடல்களை பாடி பிரபலமானார்.  1974-ம் ஆண்டு தமிழில் தீர்க்கசுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற,முத்தான பாடலாக அமைந்தது. தீர்க்கசுமங்கலி படத்திற்கு முன்பே, இவர், வீட்டுக்குவந்த மருமகள், சொல்லத்தான் நினைக்கிறேன் முதலான படங்களில் பாடியிருந்தாலும், தீர்க்கசுமங்கலி படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது. 

மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப்நாட்டுப்புறஇசை, உள்ளிட்ட பலவிதமான இசைப்பாடல்களையும் நன்றாகப் பாடக் கூடிய பாடகி வாணிஜெயராம் இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் பாடிய செல்லக்குழந்தைகளே பாடலில், இசையிலும்சரி, குரலிலும் சரி, குழந்தைகளின் குதூகலஉணர்வு வழிந்தோடுவதை உணரமுடியும். 

பாலைவனச்சோலை படத்தில் இவர் பாடிய மேகமே, மேகமே! பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை, நெகிழவைக்கக் கூடியது.  புனித அந்தோனியார் படத்தில் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார், பி. சுசீலாவுடன் இணைந்து பாத பூஜை படத்தில் கண்ணாடி அம்மா உன் இதயம், அந்தமான் காதலியில் நினைவாலே சிலை செய்து, சினிமாப் பைத்தியம் படத்தில் என் உள்ளம் அழகான வெள்ளித்திரை, தங்கப்பதக்கத்தில் தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, பாலாபிஷேகத்தில் ஆலமரத்துக் கிளி எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் வாணிஜெயராம். அபூர்வராகங்கள், சங்கராபரணம் (தெலுங்கு), சுவாதிகிரணம்(தெலுங்கு) முதலான படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வாணிஜெயராம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து