முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் பிரபல பெண் யூடியூபர் கவுரவ கொலை

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      உலகம்
Iraq 2023 02 06

Source: provided

திவானியா : ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண்  யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. 

ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள திவானியா என்ற இடத்தை சேர்ந்த டிபா அல்அலி என்ற 22 வயது பெண். சமூக வலைத்தளத்தில் பிரபலமடைந்து பலரது ஆதரவை பெற்றார். அவருக்கு அண்டை நாடுகளில் ரசிகர்கள் பெருகியதால் துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

துருக்கியை சேர்ந்த ரசிகர் ஒருவருடன் காதல் கொண்ட டிபா அல்அலி சிறிது காலம் துருக்கி சென்று வாழ்ந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அழைத்ததால் சொந்த ஊர் திரும்பியவர் தனது தந்தையை சந்தித்துள்ளார். 

அப்போது  டிபா அல்அலியுடன் அவரது தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மகளின் கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார்.  இது ஒரு கவுரவக் கொலை என்று ஈராக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மரணத்திற்கு பிறகு டிபா அல்அலியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து