Idhayam Matrimony

மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Ponmudi 2023 03 25

Source: provided

சென்னை : மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவரும் வி.ஐ.டி. வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார். 

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்., கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் நடத்தும் இந்த கருத்தரங்கு பயனுள்ளது. அனைத்து மாநிலங்களையும் அவர்கள் கல்வி கொள்கையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள உரிமை வழங்கபட வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் ஒரு சில வரவேற்க தக்க நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் நுழைவு தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவு தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுத முடியும். அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி கல்வி கொள்கை வைத்துள்ளது. மாநிலங்கள் ஊக்கப்படுத்த பட வேண்டும்,அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பூனை செல்வதற்கு ஒரு ஓட்டை எலி செல்வதற்கு ஒரு ஒட்டையா என முன்னாள் முதல்வர் அண்ணாவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு 2 மொழிகள் போதும். மூன்றாவதாக ஒரு மொழியை திணிக்ககூடாது. இது தொடர்பாக ஏஐசிடிஇ தலைவருக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து