முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
RK-Suresh 2023 04 01

Source: provided

சென்னை : ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர்  ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா, மைக்கேல் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

மேனேஜர் மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ராஜா, அய்யப்பன், ரூசோ, ரஜசேகர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, இதில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், அதனை உறுதிசெய்ய பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது. 

ரூசோ, மோசடியின் மூலம் கிடைத்த பணத்தின் குறிப்பிட்ட தொகையை ஆர்.கே.சுரேஷிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், ரூசோ மற்றும் ராஜசேகர் இருவருடனும் ஆர்.கே.சுரேஷ் தொடர்பில் இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 இதில் ஆர்.கே.சுரேஷ் செல்போன் நம்பர் மற்றும் அவர் வந்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் போன்ற பல்வேறு ஆதாரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.கே. சுரேஷை விசாரிக்க அவரை தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் இரண்டு மாதங்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

அவரிடம் உரிய விசாரணை நடத்தாமல் அவருடைய தொடர்பு என்ன என்பதை உறுதியாக சொல்ல முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள இருப்பதாக பொருளாதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து