முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மீண்டும் பிரதமராக 49 சதவீத மக்கள் விருப்பம் : கருத்துக்கணிப்பில் தகவல்

சனிக்கிழமை, 27 மே 2023      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி : மோடியே மீண்டும் பிரதமர் ஆக 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போதே கட்சிகள் தயாராகி வரும் நிலையில், மோடியே மீண்டும் பிரதமராக 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. இதில், 49 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

18 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து