முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா : கவர்னர் ரவி பதவிபிரமாணம் செய்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2023      தமிழகம்
Sanjay-Vijayakumar-1 2023-0

Source: provided

சென்னை : சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படமால் இருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மும்பை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதியாக நேற்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி எற்றுக் கொண்டார்.  அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா ஐகோர்ட்  தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.வைத்தியாநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன். மா. சுப்பிரமணியம், சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து