முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரிதம் விமர்சனம்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Turitam-vimarcanam 2023-06-

Source: provided

வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம். சென்னையில் வாடகை கார் ஓட்டுனரான ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். தந்தையின் நிர்ப்பந்தத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார் ஈடன். கடைசியாக அவரிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற ஜெகனின் முயற்சி தோல்வியில் முடிகிறது. இந்த நிலையில் ரெயிலை தவற விடுகிறார் ஈடன். இதனால் ஜெகனுடன்  பைக்கிலேயே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. வழியில் பைக் பழுதாகி நிற்க, காரில் லிப்ட் கேட்கிறார் நாயகி, அப்போது ஒரு கார் நின்று ஈடனை மட்டும் ஏற்றிக் கொண்டு பறக்கிறது. ஈடனை ஜெகன் கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது என்பதே மீதி கதை… அதிரடியாகவும், அன்பாகவும் அசத்தியிருக்கிறார் நாயகன் ஜெகன், நாயகி ஈடனுக்கு கனமான பாத்திரம், பால சரவணன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். வாசன் மற்றும் அன்புவின் ஒளிப்பதிவு காட்சிகளும் நரேஷின் பின்னணி இசையும் கதையோடும் நம்மை ஒன்றி போக வைக்கிறது. மொத்தத்தில் பயணத்தை கதைக்களமாக வைத்து ஒரு காதல் கதையை அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர் வெங்கடேசன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து