முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி திருக்கோவிலில் பஞ்சாமிர்தம் விலை ரூ. 5 உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : பழனி முருகன் திருக்கோவிலில் முன்னறிவிப்பின்றி பஞ்சாமிர்தம் விலை ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

சாதாரண நாட்களிலும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் நிலையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். 

இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான ஸ்டால்களில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். 

கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இங்கு அரை  கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ. 35-க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ. 5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்கிறது. டின் பஞ்சாமிர்தம் ரூ. 40-ல் இருந்து ரூ.45-க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ. 35-ல் இருந்து ரூ. 40 -க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து