முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஆண்டனி மகள் மறைவு: திரைத்துறையினர் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      சினிமா
Meera 2023-09-19

Source: provided

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகள் மீராவின் உடலுக்கு திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் இல்லத்தில், அவரது மூத்த மகள் மீரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை பகுதியில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மகள் மீரா (16), சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் திங்கள் இரவு மீரா, தனது படுக்கையறைக்கு தூங்குவதற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை அதிகாலை தந்தை விஜய் ஆண்டனி, மகளைப் பார்க்க படுக்கையறைக்கு சென்றார். அப்போது அங்கு மீரா, துப்பட்டாவால் ஃபேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த பணியாளர்கள் உதவியுடன் மீராவை மீட்டு, காரின் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் மீராவை பரிசோதனை செய்தனர். இதில், மீரா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் காவல்துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து வந்து மீரா உடலைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் மீரா மன அழுத்தத்தில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை சம்பவம் தமிழக திரைத்துறையினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  இதையடுத்து, திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் மீராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து