முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் 2-வது சீசன் மலர் கண்காட்சி: அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார் : 7500 தொட்டிகளை கொண்டு சந்திரயான்-3 வடிவமைப்பு

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
Ooty 2023-09-29

Source: provided

ஊட்டி :  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று துவக்கி வைத்தார். 

7500 பல வண்ண மலர் தொட்டிகளை கொண்டு சந்திரயான்-3 விண்கல வடிவமைப்பு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்திடும் வகையில் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 4 லட்சம் வண்ண வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

இவை தற்போது பூத்து குலுங்குகின்றன. இவற்றை நேற்று சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ வசதியாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டாவது சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மலர் பாத்திகளில் 4 லட்சம் மலர் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும்  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்காக டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரெட்டம், சைக்ளமென், ஜெரோனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகைகளில் 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர்கள் அலங்கார மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து