முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021 - 2022 காலக்கட்டத்தில் உலக அளவில் தட்டம்மை இறப்பு 43 சதவீதம் உயர்வு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
Corona 2023 04 02

புதுடெல்லி, தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய தட்டம்மை இறப்புகளில் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) ஆகியவற்றின் புதிய ஆய்வறிக்கையில், "தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்து வருவதைத் தொடர்ந்து, 2021-2022-ல் இருந்து உலகளவில் தட்டம்மை இறப்புகளின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ல் 22 நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததாலும், 2022-ல் 37 நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததாலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 37 நாடுகளில் 28 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 6 நாடுகள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியையும், 2 நாடுகள் தென்கிழக்கு ஆசியாவையும், ஒரு நாடு ஐரோப்பாவையும் சார்ந்தவை. இந்த நாடுகளில் தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் மிகக் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தட்டம்மை அதிகரிப்பும் இறப்பு அதிகரிப்பும் அதிர்ச்சியளிக்கிறது என்றும், இந்த நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் குறைந்து வருவது எதிர்பாராதது. தட்டம்மை நோய் மற்றும் இறப்புகளைத் தடுக்க அவசரமாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது முக்கியமானது" என்று CDC-இன் உலகளாவிய நோய்த் தடுப்பு பிரிவின் இயக்குநர் ஜான் வெர்டெஃபியூயில் கூறியுள்ளார். ஏறக்குறைய 2.2 கோடி பேர் முதல் டோஸையும், 1.1 கோடி பேர் இரண்டாவது டோஸையும் தவறவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸின் உலகளாவிய தடுப்பூசி கவரேஜ் விகிதம் 83 சதவீதம் என்றும், இரண்டாவது டோஸ் கவரேஜ் விகிதம் 74 சதவீதம் என்றும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்வதன் மூலமே மக்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து