முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நெப்போலியன் அணிந்த தொப்பி

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      உலகம்
Napoleon 2023-11-20

Source: provided

பாரிஸ் : சாயம்போன, விரிசல் கண்ட நெப்போலியன் அணிந்திருந்த இரு முனைத் தொப்பியொன்றை ரூ. 17.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் ஒருவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்துகொண்டு ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி இது. நெப்போலியன் அணிந்திருந்த உடைமைகள் சிலவற்றில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு இறந்துவிட்ட பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவரின் சேகரிப்பிலிருந்த இந்தத் தொப்பி உள்ளிட்ட நெப்போலியன் தொடர்பான சில அரும்பொருள்கள், பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பிதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 

தொப்பி தொடக்கத்தில் 6.5 லட்சம் டாலர் என மதிப்பிடப்பட்டது. தொடர்ந்து தொகை உயர்ந்துகொண்டே சென்றது. முடிவில் 21 லட்சம் டாலருக்குத் தொப்பியை ஓஸுனா ஏல மையத்தின் தலைவர் ழான் பே ஓஸுனா ஏலத்தில் எடுத்தார். நெப்போலியன் தொப்பியை ஏலத்தில் ஓஸுனா எடுத்ததும் அரங்கிலிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

பொதுவாகத் தங்கள் இருமுனைத் தொப்பிகளின் இரு முனைகளும் முன்னும் பின்னும் இருக்குமாறுதான் மற்றவர்கள் அணிவார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் தொப்பியின் இரு முனைகளும் தன் இரு தோள்களின் பக்கம் இருக்குமாறு அணிவார். இந்தப் பாணிக்குப் போர்க்களப் பாணி என்று பெயர். இதன் காரணமாக சண்டைகளின்போது, களத்தில் தங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பதை நெப்போலியனின் படை வீர்ர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில நாள்களில் நெப்போலியன் பற்றிய ஆர்வத்தை மக்களிடம் மீண்டும் தூண்டக்கூடிய வகையில், ரிட்லி ஸ்காட்டின் நெப்போலியன் திரைப்படம் வெளிவரும் நிலையில், இந்த ஏலம் நடந்திருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து