முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      சினிமா      தமிழகம்
Cinema-screen

சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் சினிமா காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன என்றும் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து