முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
SUN 2023-02-28

சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். 

சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரியவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர். வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மேலும், திருச்சி, திருப்பத்தூர், தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை விமான நிலையம், மதுரை நகரம், கரூர், ஈரோடு, தரும்மபுரி, சென்னை ஆகிய பகுதிகளிலும் வெப்பம் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலை வீசும். சென்னையில் 2 நாட்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து