முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Kashmir

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிக்ள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில்  3  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து