முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: ரயில்வே துறை விளக்கம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
Kasthuri 2024-05-10

Source: provided

கடலூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த  விவாரத்தில் அபாய சங்கிலி சரியாக இயங்கியதாக ரயில்வே துறை விளக்கம்  அளித்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து கொல்லம் ரயிலில் கர்ப்பிணி பெண் கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார்.  விருத்தாசலம் அருகே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்தும் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பக்கத்து பெட்டியில் இருந்த அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தியதாகவும் அவர்கள் கூறி இருந்தனர். இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ரயில்வே துறை அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை என்றும் ரயில்வே விசாரணையில் அபாய சங்கிலி சரியாக இயங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாக தெரிவித்துள்ளது.  , 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து