முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது  மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும்  அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. 

 லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து